search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் மோதல்"

    • எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் மோதியது.
    • அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் அனும தித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள கோட்டமருதூர் கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பத்தியநாதன் மனைவி சம்மனசுமேரி (வயது 57). இவர் தனது சொந்த ஊரிலிருந்து வேளாங்கண்ணிக்கு நடை பயணமாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று இருக்கிறார். திருக்கோவிலூர் செவலை ரோட்டின் வழியாக வீரட்டகரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டி ருந்தபோது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் மோதியது.

    இதில் சம்மன சுமேரிக்கு பின் தலையில் அடிபட்டது. உடன் அவரை திருக்கோ விலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பா க்கத்தில் உள்ள அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் அனும தித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது மோட்டார் சைக்கிளில் பூண்டு வியாபாரம் செய்வதற்காக திருக்கோவிலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • சுயநினைவு இழந்ததால் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விவரம் தெரியவில்லை .

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 52). பூண்டு வியாபாரி. இவர் நேற்று மாலை ஏழுமலை தனது மோட்டார் சைக்கிள் பூண்டு வியாபாரம் செய்வதற்காக திருக்கோவிலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். பெரியசெவலை அருகே செல்லும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஏழுமலை மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஏழுமலை பலத்த காயம் அடைந்தார். உடனே அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

    எதிரே மோதிய 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் அடிபட்டு சுயநினைவு இழந்ததால் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விவரம் தெரியவில்லை .அவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • தனது இருசக்கர வாகனத்தில் கெடிலம் கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் வட்டம் பிரிவிடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மகன் கார்த்தி (வயது 28). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கெடிலம் கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காட்டு செல்லூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ், மற்றும் சிபிராஜ் என்பவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். எதிர்பாராதவிதமாக கார்த்திக் இருசக்கர வாகனமும், எதிரே வந்த வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார்த்தி மற்றும் எதிரே வந்த தினேஷ், மற்றும் சிபிராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே மேல்சிகிச்சைக்காக தினேஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சிபிராஜ் சென்னை மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்ட னர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மோதி ஊர்காவல்படை வீரர் காயமடைந்தார்.
    • பின்னால் வந்த அடையாளம் தெரியாத மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஏ.மேல் மாம்பட்டு கிராமத்தை ேசர்ந்தவர் செல்வராஜ் (53) இவர் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படை வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவருடன் பணிபுரியும் முருகன் இருவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்த னர்.இதுகுறித்து பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சண்முக சுந்தரியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு பேச்சிமுத்து வீ.கே.புதூருக்கு சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது நடந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    சுரண்டை:

    வீ.கே.புதூர் அருகே உள்ள வெள்ளக்கால் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து(வயது 54). இவர் வீ.கே.புதூரில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது மகள் சண்முகசுந்தரிக்கு வீ.கே.புதூரை சேர்ந்த ஒருவருடன் திருமணம் ஆகி உள்ளது. சம்பவத்தன்று சண்முக சுந்தரியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு பேச்சிமுத்து வீ.கே.புதூருக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே ராஜபாண்டி கிராமத்தை சேர்ந்த சூர்யா(20) என்ற வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளும், பேச்சிமுத்துவின் வாகனமும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருநாவலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
    • மோட்டார் சைக்கிளை விட்டு தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    திருநாவலூர், ஆக.25-

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே லத்தாமூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிகண்ணு (வயது 55). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது சாலை ஓரமாக சென்ற சாமிகண்ணு மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தனர். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாமி கண்ணுவை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகி ச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக விழுப்புரம் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சாமிகண்ணு பரிதாபமாக இருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்தை ஏற்படுத்தி மோட்டார் சைக்கிளை விட்டு தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்.
    • இவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த படுகாயம் அடைந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே மண்டக மேடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் விவசாயி. இவர் கடந்த 23-ந் தேதி கடலூர், சித்தூர் சாலையில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு  பலத்த படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவரை மீட்டு முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் இன்று காலை இறந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கெலமங்கலம் அருகே நடந்து சென்ற விவசாயி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் விருப்பாச்சி கோவில்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது60). விவசாயியான இவர் நேற்றிரவு கெலமங்கலம் டவுனுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கெலமங்கலம்- தேன்கனிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அருகே வந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சீனிவாசன் மீது மோதியது. 

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் தென்னை மரத்தில் மோதியதில் பலத்த காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

    திருவோணம்:

    திருவோணம் அருகே கறம்பக்குடியில் செயல்படும் ஒரு ஓட்டலில் வடமாநில்ததை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் செவ்வாய்பட்டிக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற தென்னை மரம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் திருவோணம் சப்- இன்ஸ் பெக்டர் மேகநாதன், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வாலிபர் வாகனம் மோதி இறந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    பலியான வாலிபரின் பெயர் விவரம் உடனடியாக தெரிய வில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    காரிமங்கலம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கொத்து மாரனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பார்வதி (வயது65). இவர் முரசுப்பட்டி- பொம்ம அள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பார்வதி மீது மோதியது. 

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பார்வதி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    தருமபுரி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பழைய தருமபுரி எறங்காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (வயது55). விவசாயியான இவருக்கு திருமணமாகி காவேரியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று மாதையன் காய்கறி வாங்குவதற்காக தனது மொபட்டில் தருமபுரிக்கு வந்தார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவர் கிருஷ்ணகிரி சாலையில் செல்லும்போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாதையன் பலத்த காயம் அடைந்தார். 

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 

    இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சை அருகே நடந்து சென்ற மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள அயோத்திபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகள் காவியா (வயது 15). இவர் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கிப்பட்டி- அயோத்திப்பட்டி சாலையில் சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக காவியா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காவியா பலத்த காயம் அடைந்தார். 

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×